Sunday, December 5, 2010

SONG BOOK

http://miracle-ag-church-adyar.blogspot.in/2011/09/church-of-hope.html   

DISCIPLES OF JESUS CHRIST

PASTOR.V.S.SAMUELRAJ

SONG OF PRAISE
அசைவாடும் ஆவியே

அசைவாடும் ஆவியேதூய்மையின் ஆவியே (2)

இடம் அசைய உள்ம் நிரம்ப

இறங்கி வாருமே(2)



பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே (2)
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே (2)
அசைவாடும்...

தேற்றிடுமே உள்ங்களை
இயேசுவின் நாமத்தினால் (2)
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால் (2)
அசைவாடும்...

துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால் (2)
நிறைத்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே (2)
அசைவாடும்...



அடைக்கலமே உமதடிமை நானே

அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே 
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே


நித்தம் நித்தம் நான் நினைப்பேனே

அளவற்ற அன்பினால் அணைப்பவரே

எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே - ஆ

கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமதே - ஆ

என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனை காட்டுபவரே
நம்பி வந்தோரைக் கிருபை சூழ்ந்து கொள்ளுதே - ஆ

கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னைக் குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றி விட்டீரே - ஆ



அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் 
இந்த லேசான உபத்திரவம் 
சோர்ந்து போகாதே - நீ 



1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் 

புதிதாக்க படுகின்ற நேரமிது சோர்ந்து 

2. ஈடு இணையில்லா மகிமை 
இதனால் நமக்கு வந்திடுமே 

3. காண்கின்ற உலகம் தேடவில்லை 
காணாதப் பரலோகம் நாடுகிறோம் 

4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால் 
பாக்கியம் நமக்கு பாக்கியமே 

5. மன்னவன் இயேசு வருகையிலே 
மகிழ்ந்து நாமும் களிகூருவோம் 

6. மகிமையின் தேவ ஆவிதாமே 
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்

 அதிசயமான ஒளிமய நாடாம்

அதிசயமான ஒளிமய நாடாம் 
நேசரின் நாடாம் - நான் வாஞ்சிக்கும் நாடாம் 



1. பாவம் இல்லாத நாடு 

ஒரு சாபமும் காணா நாடு - 2 
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம் 
உன்னதத்தில் ஓசன்னா - அல்லேலூயா 

2. சந்திர சூரியன் இல்லை ஆனால் 
இருள் ஏதும் காணவில்லை - 2 
தேவகுமாரன் ஜோதியில் ஜோதி 
நித்திய வெளிச்சமவர் - என்றும் பகல் 

3. விதவிதக் கொள்கையில்லை 
பலப்பிரிவுள்ள பலகை இல்லை - 2 
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர் 
எங்குமே அன்புமயம் - அன்புள்ளோர் செல்லும் 

4. பிரச்சனை ஏதும் இல்லை 
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை - 2 
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர் 
எவருமே அங்கு இல்லை - அன்பே மொழி 

5. பல பல திட்டம் இல்லை 
ஆளும் சட்டங்கள் ஏதும் இல்லை - 2 
காவல்துறையில்லை கண்டிப்பும் இல்லை 
மனிதனின் ஆட்சியில்லை - பேரானந்தமே 

6. கடைத்தெரு ஏதும் இல்லை 
தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை - 2 
தரித்திரர் செல்வர் சிறியவர் பெரியோர் 
ஆகிய சிறப்பும் இல்லை - எல்லாம் சமம் 

7. இயேசுவின் இரத்ததினால் 
பாவம் கழுவினால் செல்லலாமே - 2 
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர் 
இப்ப+மியில் எவரும் வேண்டாம் - இன்றே வாரீர்


 அப்பா பிதாவே அன்பான தேவா  

அப்பா பிதாவே அன்பான தேவா 
அருமை இரட்சகரே ஆவியானவரே 



1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் 
என் நேசர் தேடி வந்தீர் 
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து 
நிழலாய் மாறி விட்டீர் 
நன்றி உமக்கு நன்றி (அப்பா) 

2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் 
தயவாய் நினைவு கூர்ந்தீர் 
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து 
கரம் பற்றி நடத்துகிறீர் 

3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை 
தூக்கி எடுத்தீரே 
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி 
கழுவி அணைத்தீரே 

4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து 
எந்நாளும் காப்பவரே 
மறவாத தெய்வம் மாறாத நேசர் 
மகிமைக்குப் பாத்திரரே 

5. ஒன்றை நான் கேட்பேன் 
அதையே நான் தேடி ஆர்வமாய் நாடுகிறேன் 
உயிரோடு வாழும் நாட்களெல்லாம் 
உம்பணி செய்திடுவேன் - நன்றி  


அருள் ஏராமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே 

  அருள் ஏராமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே

ஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயர்ப்பிக்குமே


அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே

அருள் ஏராமாய் பெய்யும் மேக மந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் அருள்...

அருள் ஏராளமாய் பெய்யும் இயேசுவின் நாமத்திலே
இங்குள் கூட்டத்திலேயும் கிரியை செய்தருளுமே அருள்...

அருள் ஏராளமாய் பெய்யும் பொழியும் இணமே
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே அருள்...

அல்லேலூயா கர்த்தரையே 

 1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் 

அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள் 
வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள் 
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் 

இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் ப+மியில்ஆட்சிசெய்வார் 
அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள் 

2. தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள் 
இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள் 
எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள் 
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் 

3. சூரியனே, சந்திரனே தேவனைத் துதியுங்கள் 
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள் 
அக்கினியே, கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள் 
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் 

4. பிள்ளைகளே, வாலிபரே தேவனைத் துதியுங்கள் 
வாழ்வதனை அவர்பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள் 
பெரியவரே, பிரபுக்களே தேவனைத் துதியுங்கள் 
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள் 

5. ஆழ்கடலே, சமுத்திரமே தேவனைத் துதியுங்கள் 
அலைஅலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள் 
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள் 
பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள 

 அழகாய் நிற்கும் யார் இவர்கள்?   

அழகாய் நிற்கும் யார் இவர்கள்? 

திரளாய் நிற்கும் யார் இவர்கள்? 
சேனைத்தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில் 
அழகாய் நிற்கும் யார் இவர்கள்? 

1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ 
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் 
சிறிதானதோ பெரிதானதோ 
பெற்றப்பணி செய்து முடித்தோர் 

2. காடு மேடு கடந்த சென்று 
கர்த்தர் அன்பை பகிர்ந்தவர்கள் 
உயர்வினிலும் தாழ்வினிலும் 
ஊக்கமாக ஜெபித்தவர்கள்! 

3. தனிமையிலும் வறுமையிலும் 
லாசரு போன்று நின்றவர்கள் 
யாசித்தாலும் போஷித்தாலும் 
விசுவாசத்தைக் காத்தவர்கள் 

4. ஒன்றே ஒன்று என்வாஞ்சையாம் 
அழகாய் நிற்போர் வரிசையில் நான் 
ஓர் நாளினில் நின்றிடவும் 
இயேசு தேவா அருள்புரியும் 

  
அழைக்கிறார் அழைக்கிறார் இதோ   

அழைக்கிறார் அழைக்கிறார் இதோ நீயும் வா உந்தன் நேசர் ஆவலாய் அழைக்கிறார் இதோ 
1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர் கல்வாரியின் மேட்டினில் கண் கொள்ளாத காட்சியே கண்டிடும் வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும் 
2. நோயை ஏற்றவர் பேயை வென்றவர் நீதிபரன் உன்நோயை நிச்சயமாய்த் தீர்த்தாரே நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் 
3. துன்பம் சகித்தவர் தூயரடைந்தவர் இன்னலுற்ற உன்னையே அண்ணல் இயேசழைக்கிறார் துன்புறும் நெஞ்சமே துரிதமாய் நீ வாராயோ 
4. கல்லறை திறக்க காவலர் நடுங்க கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே உயிர்த்தார் ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே 
5. சாந்த சொரூபனே சத்திய வாசனே வஞ்சமற்ற வாயனே வந்தழைக்கும் நேயனே தஞ்சமே தன்னையே தந்துன்னை அழைக்கிறார்

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்   

1. அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் 

ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் (2) 

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் 
முழு பெலத்தோடு அன்பு கூருவேன் 
ஆராதனை ஆராதனை - 4

2. எபிநேசரே எபிநேசரே 
இதுவரையில் உதவினீரே (2) 
இதுவரையில் உதவினீரே - உம்மை 

3. எல்ரோயீ எல்ரோயீ 
என்னைக் கண்டீரே நன்றி ஐயா 
என்னைக் கண்டீரே நன்றி ஐயா - உம்மை 

4. யெகோவா ராப்பா யெகோவா ராப்பா 
சுகம் தந்தீரே நன்றி ஐயா 
சுகம் தந்தீரே நன்றி ஐயா - உம்மை 


அன்பே பிரதானம் 

  அன்பே பிரதானம், - 

சகோதர அன்பே பிரதானம்.

1. பண்புறு ஞானம்,- பரம நம்பிக்கை,

இன்ப விஸ்வாசம், - இவைகளிலெல்லாம் 

2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்,
கலகல வென்னும் – கைம்மணியாமே

3. என் பொருள் யாவும் - ஈந்தளித்தாலும்,
அன்பில்லையானால் - அதிற்பயனில்லை

4. துணிவுட னுடலைச் – சுடக்கொடுத்தாலும்,
பணிய அன்பில்லால் – பயனதிலில்லை

5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்
போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள

6. புகழிறு மாப்பு, - பொழிவு பொறாமை,
பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா 

7. சினமடையாது, - தீங்கு முன்னாது, 
தினமழியாது, - தீமை செய்யாது

8. சகலமுந் தாங்கும், - சகலமும் நம்பும்,
மிகைபட வென்றும் – மேன்மை பெற்றோங்கும்

அனாதி தேவன் உன் அடைக்கலமே   

 அனாதி தேவன் உன் அடைக்கலமே 

அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே 

இந்த தேவன் என்றென்றுமுள்ள 
சதா காலமும் நமது தேவன் 
மரணபரியந்தம் நம்மை நடத்திடுவார் 

1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் 
தூய தேவ அன்பே 
இவ் வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை 
இனிதாய் வருந்தி அழைத்தார் 

2. கானகப் பாதை காரிருளில் 
தூய தேவ ஒளியே 
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை 
அரும் நீரூற்றாய் மாற்றினாரே 

3. கிருபை கூர்ந்து மனதுருகும் 
தூய தேவ அன்பே 
உன் சமாதானத்தின் உடன்படிக்கைதனை 
உண்மையாய்க் கர்த்தர் காத்துக்கொள்வார் 

4. இப்புவி யாத்திரை கடந்திடுவாய் 
தூய தேவ தயவால் 
கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினில் 
கிடைக்கும் இளைப்பாருதல் 

5. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே 
தூய தேவ அருளால் 
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் 
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம


ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே  
  1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே

நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே

வீசீரோ வான ஜோதி கதிரிங்கே
மேசியா எம்மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்.

2. இம் மணமக்களோ டென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோ டன்பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கிதரிக்க
ஊக்கமருளுமே.

3. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும்மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏக ராஜனாய்
ஏற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே.

4. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்துதித்தும் பிரஸ்தாபிக்க


ஆத்துமமே, என் முழு உள்ளமே   

ஆத்துமமே, என் முழு உள்ளமே - உன் 

ஆண்டவரை தொழுதேத்து, இந்நாள்வரை 
அன்பு வைத்தாதரித்த - உன் 
ஆண்டவரைத் தொழுதேத்து 

1. போற்றிடும் வானோர், ப+தலத்துள்ளோர் 
சாற்றுதற்கரிய தன்மையுள்ள 

2. தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத 
உலகமுன் தோன்றி ஒழியாத 

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான 
வினை பொறுத்தருளும், மேலான 

4. வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த 
ஓதரும் தலைசெய் துயிர்தந்த 

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும், 
முற்றும் கிருபையினால் முடிசூட்டும் 

6. துதி மிகுந்தேற தோத்திரி தினமே 
இதயமே, உள்ளமே, என் மனமே 


ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா 

  ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா 
ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த கோடினரா


1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வே 
தாளத்தைச் சங்கரித்து, - முறித்து 
பத்ராசனக் கிறிஸ்து - மரித்து 
பாடுபட்டுத்தரித்து, முடித்தார்

2. சாவின் கூர் ஒடிந்து, - மடிந்து, 
தடுப்புச் சுவர் இடிந்து, - விழுந்து, 
ஜீவனே விடிந்து, - தேவாலயத் 
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது

3. வேதம் நிறைவேற்றி, - மெய் தோற்றி, 
மீட்டுக் கரையேற்றி, - பொய் மாற்றி, 
பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி, 
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்


ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் 

  ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் 

ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் 

1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன் 
நல்லவரே உம்மை ஆராதிப்பேன் 

2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன் 
பணிந்து குனிந்து ஆராதிப்பேன் 

3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் 
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் 

4. தூதர்களோடு ஆராதிப்பேன் 
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் 

5. காண்பவரை நான் ஆராதிப்பேன் 
காப்பவரை நான் ஆராதிப்பேன் 

6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன் 
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன் ]

  

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலே

1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே

2. பத்மூ தீவினிலே பக்தனைத் தேற்றினீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே

3. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே

4. நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே
ஏக்க முற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே

5. ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே

இதோ மனுஷரின் மத்தியில்   

 இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே 

வாசஞ்செய்கிறாரே 

1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே 
தம் ஜனத்தாரின் மத்தியிலாம் 
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே 
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே 

2. தேவ ஆலயமும் அவரே 
தூய ஒளி விளக்கும் அவரே 
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகந்தீர்க்கும் 
சுத்த ஜீவநதியும் அவரே 

3. மகிமை நிறை ப+ரணமே 
மகா பரிசுத்த ஸ்தலமதுவே 
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே 
எங்கள் பாதங்கள் நிற்கிறதே 

4. சீயோனே உன் வாசல்களை 
ஜீவ தேவனே நேசிக்கிறார் 
சீர் மிகுந்திடுமிச் சுவிசேஷந்தனை 
கூறி உயர்த்திடுவோம் என்றுமே 

5. முன்னோடியாம் இயேசு பரன் 
மூலைக்கல்லாகி சீயோனிலே 
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை 
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம 
 இயேசு இராஜனின் திருவடிக்கு  

  இயேசு இராஜனின் திருவடிக்கு சரணம், சரணம், சரணம்! 

ஆத்ம நாதரின் மலரடிக்கு சரணம், சரணம், சரணம்! 

1. பார்போற்றும் தூய தூய தேவனே 
மெய்ராஜாவே எங்கள் நாதனே 
பயம் நீக்கும் துணையாவும் ஆனீரே 
சரணம்! சரணம்! சரணம்! 

2. இளைப்பாறுதல் தரும் வேந்தனே 
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே 
ஏழை என்னை ஆற்றி தேற்றிக் காப்பீரே 
சரணம்! சரணம்! சரணம்! 

3. பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே 
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே 
ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கின்றேன் 
சரணம்! சரணம்! சரணம்! 

இயேசு என்ற திரு நாமத்திற்கு   

இயேசு என்ற திரு நாமத்திற்கு 
எப்போதுமே மிக ஸ்தோத்திரம் 


1. வானிலும் ப+விலும் மேலான நாமம் 
வல்லமையுள்ள நாமமது 
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது 

2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த 
வீரமுள்ள திருநாமமது 
நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே 

3. பாவத்திலே மாளும் பாவியை மீட்க 
பாரினில் வந்த மெய் நாமமது 
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது 

4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும் 
உன்னத தேவனின் நாமமது 
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது 

5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில் 
தாங்கி நடத்திடும் நாமமது 
தடை முற்றுமகற்றிடும் நாமமது


இயேசுவின் நாமம் இனிதான நாமம்   

இயேசுவின் நாமம் இனிதான நாமம் 
இணையில்லா நாமம், இன்ப நாமம் 

1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும் 
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் 

2. பரிமளத்தைலமாம் இயேசுவின் நாமம் 
பார் எங்கும் வாசனை வீசுடும் நாமம் 

3. வானிலும் ப+விலும் மேலான நாமம் 
வானாதி வானவர் இயேசுவின் நாமம் 

4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம் 
நம்பினோரை என்றும் கைவிடா நாமம் 

5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம் 
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் 

6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம் 
சாபப் பிசாசைத் துரத்திடும் நாமம்


இயேசுவின் நாமமே திருநாமம்  

  இயேசுவின் நாமமே திருநாமம் - முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்.

1. காசினியில் அதனுக் கிணையில்லையே - விசு
வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே.

2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் - அதை
நித்தமும் தொழுபவர்க்கு ஜெயநாமம்.

3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் - இது
சத்திய விதேய மனமொத்தநாமம்.

4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்நாமம் - நமை
அண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம்.

5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி - பெரும்
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி.
இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன் 

  இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன் 
இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது 

1. நேசரின் இரத்தம் என்மேலே 
நெருங்காது சாத்தான் 
பாசமாய்ச் சிலுவையில் பலியானார் 
சாத்தானை வென்று விட்டார் 

2. இம்மட்டும் உதவின எபனேசரே 
இனியும் காத்திடுவார் 
உலகிலே இருக்கும் அவனைவிட 
என் தேவன் பெரியவரே 

3. தேவனே ஒளியும் மீட்புமானார் 
யாருக்கு அஞ்சிடுவேன் 
அவரே என் வாழ்வின் பெலனானார் 
யாருக்கு பயப்படுவேன்? 

4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும் 
மறவாத என் நேசரே 
ஆயனைப்போல நடத்துகிறார் 
அபிஷேகம் செய்கின்றார் 

5. மலைகள் குன்றுகள் விலகினாலும் 
மாறாது உம் கிருபை 
அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர் 
அணைத்த சேர்த்துக் கொண்டார் 

உம்பாதம் பணிந்தேன் 

  உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே 
உம்மையன்றி யாரைப் பாடுவேன் - இயேசையா 
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே! 
1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே 
தேடினதால் கண்டடைந்தேன் பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தீர்!


2. புது எண்ணெயால் புது பெலத்தால் புதிய கிருபை புதுக்கவியால் 
நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர்!


3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர்


4. என்முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் 
உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே!


5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க 
கிளை நறுக்கி களைபிடுங்கி கர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்வீர்!

6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா! ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன்!

7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன

 உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் 

  1. உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் 
உலகத்தின் இறுதி வரை 
கல்வாரி தொனிதான் மழை மாரிப் பொழியும் 
நாள்வரை உழைத்திடுவோம்! 

2. அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம் 
ஆவியில் அனலும் கொள்வோம் 
அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து 
வேற்றுமையின்றி வாழ்வோம்! 

3. அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம் 
சரித்திரம் சாட்சி கூறும் 
இரத்தச் சாட்சிகள் நம்மிடைத் தோன்றி 
நாதனுக்காய் மடிவோம்! 

4. கிறிஸ்துவுக்காக இழந்தவர் எவரும் 
தரித்திரர் ஆனதில்லை 
இராஜ்ஜிய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர் 
நஷ்டப்பட்டதில்லை! 

5. உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர் 
உலர்ந்த எலும்புகளே 
நீங்கள் அறியா ஒருவர் உங்கள் 
நடுவில் வந்துவிட்டார்

உம்மைப்போல் யாருண்டு? 

  உம்மைப்போல் யாருண்டு? எந்தன் இயேசுநாதா 
இந்தப் பார்தலத்தில் உம்மைப்போல் யாருண்டு? 
பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன் 
தேவா தம் அன்பினால் மன்னித்தீர் 

1. உலகம், மாமிசம், பிசாசின் பிடியில் 
அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன் 
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன் 
மனம்போல் நடந்தேன், ஏமாற்றம் அடைந்தேன் 
என்னையா தேடினீர் ஐயா, இயேசு நாதா? 
உம்மை மறந்த ஓர் துரோகி நான் 
என்னையா தேடினீர் ஐயா, இயேசு நாதா? 
அடிமை உமக்கே இனி நான். 

2. இன்றைக்கு நான் செய்யும் இந்த தீர்மானத்தை 
என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும் 
நொறுக்கும் உருக்கும் உடையும் வனையும் 
உமக்கே உகந்த தூய சரீரமாய் 
ஐம்பொறிகளையும் உமக்குள் அடக்கும் 
இயேசுவே ஆவியால் நிரப்பும் 
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய்த் திகழ 
அக்கினி என் உள்ளம் இறக்கும் 

3. வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும் 
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும் 
மேசியா வருகை வரையில் பலரை 
சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும் 
முழங்காலில் நிற்க, வேதத்தை அறிய 
தினந்தோறும் தேவா உணர்த்தும் 
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும் 
என்றுமே வராமல் காத்திடும்  

உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்   

 1. உன்னதமானவரின் 
உயர் மறைவிலிருக்கிறவன் 
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் 
இது பரம சிலாக்கியமே 

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே 
தம் சிறகுகளால் மூடுவார் 

2. தேவன் உன் அடைக்கலமே 
என் கோட்டையும் அரணுமவர் 
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் 
என் நம்பிக்கையும் அவரே 

3. ஆயிரம் பதினாயிரம் பேர்கள் 
உன் பக்கம் விழுந்தாலும் 
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே 
உன் தேவன் உன் தாபரமே 

4. தேவன் உன் அடைக்கலமே 
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ 
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே 
அணுகாமலே காத்திடுவார் 

5. உன் வழிகளிளெல்லாம் 
உன்னைத் தூதர்கள் காத்திடுவார் 
உன் பாதம் கல்லில் இடறாதபடி 
தம் கரங்களில் ஏந்திடுவார் 

6. ஆபத்திலும் அவரை நான் 
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் 
என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே 
என் ஆத்தும நேசரவர்

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே  

  ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே 
ஜீவநதியே என்னில் பொங்கி பொங்கிவா 
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே 
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 

1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே 
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே 
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் 
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே 

2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே 
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே 
கனிதந்திட நான் செழித்தோங்கிட 
கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிட 

3. இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே 
எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே 
ஆத்ம பலமும் பரிசுத்தமும் 
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே 

4. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே 
இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே 
பாவக் கறைகள் முற்றும் நீங்கிட 
பரிசுத்த சமூகத்தில் ஜெயம் பெற்றிட

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே 

  எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மாராஜனே வந்திடுவார்

1. அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே
………. எக்காள

2. கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்
………. எக்காள



எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்   

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா 
என்றென்றும் நான் பாடுவேன் 
இந்நாள் வரை என் வாழ்விலே 
நீர் செய்த நன்மைக்கே 

1. ப+மியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும் 
வான் தூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே! 

2. சூரிய சந்திரரோடே சகல நட்சத்திரக் கூட்டமும், 
ஆகாய பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே! 

3. காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும் 
நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே! 

4. பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தே 
சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஓயா துதி பாடுதே!
எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்   

எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர் 
எப்படி நன்றி சொல்வேன் - நான் 
நன்றி ராஜா....நன்றி ராஜா 

1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர் 
தேவனே உம்மை துதிப்பேன் 

2. பெலவீனன் என்று தள்ளி விடாமல் 
பெலத்தால் இடை கட்டினீர் 

3. பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன் 
கிருபையால் இரட்சித்தீரே 

4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர் 
எனக்காய் மீண்டும் வருவீர் 

5. கரங்களைப் பிடித்து கண்மணி போல 
காலமெல்லாம் காத்தீர் 

6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி 
பூரண சுகமாக்கினீர் 

7. முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி 
சாத்தானை ஜெயித்து விட்டீர் 

8. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு 
விவரிக்க முடியாதையா

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்   

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் 
நன்றியால் உம்மை நான் துதிப்பேன் 
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் 
எந்த வேளையிலும் துதிப்பேன்

1. ஆதியும் நீரே - அந்தமும் நீரே 
ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே

2. தாய்தந்தை நீரே - தாதியும் நீரே 
தாபரம் நீரே - என் தாரகம் நீரே

3. வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே 
வாதையில் நீரே - என் பாதையில் நீரே

4. துன்பநேரத்தில் - இன்பமும் நீரே 
இன்னல் வேளையில் - என் மாறிடா நேசர்

http://miracle-ag-church-adyar.blogspot.in/ 

 


No comments: